Thursday, November 29, 2007

உருப்பட வழியே இல்லை

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் அலுவல் மொழியாக தற்போது இருக்கும் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கொண்டு வரும் பரிந்துரைக்கு எதிராக தமிழக எம்.பி.,க்கள் பார்லிமென்ட்டில் குரல் கொடுத்துள்ளனர். ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரால் ஏற்கனவே தமிழக மக்களை இந்தியாவை விட்டு தள்ளி வைத்துள்ளனர். நம்முடைய மக்கள் பலருக்கு வேலை வாய்ப்பு இல்லைமைக்கு காரணம் ஹிந்தி மொழியை அறியாதது தான். கர்நாடகாவிலோ ஆந்திராவிலோ ஹிந்தியை எதிர்பதில்லையே? தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்ப்பு? இந்த விழயத்தில் நான் கேப்டன் கட்சி - அவர் ஒருவர் தான் மொழிகள் அறிய வேண்டிய விஷயத்தை பற்றி மக்களிடம் பேசியுள்ளார்.

Tuesday, November 27, 2007

கேரி கிறிஸ்டான் அடுத்த கோச்

ஒரு வழியா கோச் யாருன்னு முடிவு பண்ணிடாங்க. அதுலயும் முன் அனுபவமே இல்லாத கிறிஸ்டான் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் அப்படிங்கறதுக்கு கிரிகெட் போர்டு தான் விளக்கம் அளிக்கனும். கிறிஸ்துமஸ் முடிந்த பின் ஆஸ்திரேலியா தொடரின் போது இரண்டாவது டெஸ்ட் மட்சில் இருந்து தனது கோசிங்கை தொடங்குகிறார். வாழ்த்துக்கள்!!

Monday, November 26, 2007

மலேசியாவில் இந்துகளுக்கு (இந்தியர்களுக்கு?) அடி உதை

தங்களை நாயை விட கேவலமாக நடத்துவதாக கூறி சுமார் 5000 இந்தியர்கள் போராட்டத்தில் குதித்தனர். மலேசியா போலீஸ் சும்மா இருக்குமா? சும்மா பின்னி பெடல கழட்டிடாங்க.

நம்ம ஊருல அரசியல்வாதிங்க சும்மா இருப்பாங்களா? சும்மா பாஞ்சு பாஞ்சு சப்போர்ட் பண்றாங்க. ஆனா பாருங்க - மலேசியா போராட்டத்தில் குதிச்ச 5000 பேரும் இன்னிக்கு இந்தியக் குடிமகன் இல்லை, எல்லாரும் மலேசியா குடிமக்கள் தான். அப்பறம் நம்ம கவர்மண்ட் என்னங்க பண்ண முடியும்? மலேசியா குடியுரிமையும் வேணும், நல்லவும் நடத்தனும்!

சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? அது எந்நாடு என்றாலும், அது நம் நாட்டுக் கீடகுமா?

கங்குலி மற்றும் லக்ஷ்மன்

இந்தியா ஜெயிச்சிட்டாலும் ஜெயிச்சுது - அதுவும் கங்குலியும் லக்ஷ்மனும் ரன் அடிச்சு - ரொம்ப தான் ஓவரா புகழறாங்க. இதே டீம் முஹம்மது ஆசிபும், உமர் குல்லும் பாகிஸ்தானிடம் இருந்தால் ஜெயித்திருக்குமா?
ஆஸ்திரேலியா போய் பாண்டிங் & கோவிடம் உதை வாங்கினால் எல்லாம் சரியா போய்டும்!

Sunday, November 25, 2007

ஜோடி நம்பர் 1

கடைசியா ஜோடி நம்பர் 1 ஒரு முடிவுக்கு வந்தது. எதிர்பார்த்தது போல டிங்கு ப்ரீத்தி தான் ஜெயிச்சாங்க. ஆனா ரொம்ப ஓவரா ஜவ்வு மாதிரி இழுத்து முடிச்சிருக்க வேணாம்! அதுலயும் சிம்பு வேற டூ மச்சா பேசி கழுத்தை அறுத்தார். "சித்தி" அப்படின்னு ஒரு "நெடுந்தொடர்" பார்த்த உடனே நான் "நெடுந்தொடர்" பர்கரத நிறுத்திட்டேன். இப்போ ஜோடி நம்பர் 1 பார்த்த உடன் டி.வீ. பார்க்கறதை நிறுதிகிலாமன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்.

கொசுறு நியுஸ் என்னன்னா உமா ரியாஸ் டன்செல்லாம் ஆடினாங்க, அதாங்க இறுதி போட்டில.

ஜெயிச்சிடாங்கய்யா ஜெயிச்சிட்டாங்க!

இந்தியாவும் கடைசில இந்த டெஸ்ட் மேட்ச் ஜெயிக்க போகுது - இந்த போஸ்ட் அலைக்கு போகும் போது 16 ரன் தேவை. ஒரு முக்கியமான அதே சமயம் புததுணர்ச்சி ஓடும் விஷயம் என்னன்ன காங்குலியோட பேட்டிங். சும்மா பூந்து பூந்து விளையாடினாருங்க. அதிலையும் ஷோயப் அக்தரை ரெண்டு மூணு பவுண்டரி வேற அடிச்சாரு. ஆனா பாவம் 48 ரன்ல அவுட் ஆனது தான் பரிதாபம். கும்ப்ளேவுக்கு ஒரு நல்ல தொடக்கம்!

Saturday, November 24, 2007

கோச் எதுக்குங்கன்னா?

லேட்டஸ்ட் நியுஸ் - இந்தியா டீமும் எல்லா டோர்ணமன்ட்லயும் கொஞ்சம் நல்லாவே விளையாடிகிட்டு இருக்கு - அதனால கோச் செலக்ட் பண்ற ஐடியாவே கிடையாது இப்போ. அடுத்த லக்கி மேனேஜர் ரோஜர் பின்னி அப்படின்னு நியுஸ் ஓடுது. பார்க்கலாம்!

தெரியுமா உங்களுக்கு?

சிஸ்கோ என்றொரு கம்பெனி இருப்பது உங்களுக்கு தெரியுமா? அவர்கள் telepresence என்று ஒரு நியூ product / concept கொண்டு வந்திருக்கிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்கினால் இருவர் ஒரே மேடையில் - அதாவது ஒருவர் கலிபோர்னியாவிலும் இன்னொருவர் பெங்களூர் நகரத்திலும் இருந்து பேசுவதை பார்க்கலாம். Technology has improved so much?
http://www.youtube.com/watch?v=rcfNC_x0VvE&feature=related

Dec 15 முதல் ஸ்டாலின் முதல்வர்?

தி.மு.கவின் மாபெரும் மாநாடு திருநெல்வேலி நகரத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று பெரிதும் எதிர் பார்கப்படுகிற இந்த மாநாட்டில் ஸ்டாலினை முதல்வராக கலைஞர் அறிவிப்பார் என்று செய்திகள் கூறுகின்றன.
ஸ்டாலின் முதல்வராவது பற்றி நிறைய பேருக்கு நிறைய கருத்து இருக்கிறது. என்ன தான் நான் தி.மு.கவுக்கு நிறைய கொள்கை முடிவுகளில் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஸ்டாலின் முதல்வராவதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு தான். அவர் ஒன்றுண் நேற்று அரசியல்லுக்கு வரவில்லை - சுமார் 35 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் அவருக்கு முதல்வராக முழு தகுதி இருக்கிறது. இதில் வாரிசு அரசியல் என்று கூற ஒன்றும் இல்லை.


ஆனால் அதே சமயம், ஸ்டாலினுக்கு முதல்வரக்கு உண்டான qualities இருக்கிறதா என்று கேட்டால் அது சந்தேகமான விஷயம் தான். விஜயகாந்த் எழுப்பும் அளவிற்கு கூட ஸ்டாலின் இது வரை பிரச்சனை எதுவும் எழுப்பியது இல்லை. ஸ்டாலினையும் விஜயகாந்தையும் ஒப்பிட்டால் விஜயகாந்துக்கு தான் எனது ஒட்டு. உங்கள் கருத்து என்ன?

மானம் கெட்ட கம்யூனிஸ்ட் கூட்டம்

நந்திகிராமில் SEZ ஆரம்பிக்கிறது தொடர்பான பிரச்னையில் கலவரம் ஆன உடனே கம்யூனிஸ்ட் கட்சி ஜகா வாங்கி அப்படியே அந்தர் பல்டி அடிச்சு அணு சக்தி உடன்பாடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தினால் ஒண்ணும் பிரச்சனை இல்லை அப்படின்னு சொல்லிடாங்க. இதை தாங்க கொள்கை பிடிப்புன்னு சொல்வாங்க - கம்யூனிஸ்ட் மாதிரி கொள்கை பிடிப்பு இந்தியாவிலேயே வேறு எந்த கட்சிக்கும் கிடையாது.

Friday, November 23, 2007

கேப்டன் கும்ப்ளே

டெல்லில முதல் டெஸ்ட் மேட்ச் இப்போ நடத்து கிட்டு இருக்குதுங்க - உங்களுக்கே தெரியும் இப்போ கும்ப்ளே தான் கேப்டன். அவருக்கேன்னமோ காப்டனா இருக்க அசை தான் (யாருக்கு தாங்க இருக்காது). ஆனா பாருங்க, ஜாகிர் கான் கூட அவர மதிக்கரதில்லை. கும்ப்ளே தான் பாவம் ஜாகிர் பின்னாடி ஓடி ஓடி அட்வைஸ் குடுக்கறார். ராகுல் திராவிட் என்னமோ ஊமை மாதிரி யார் கூடவும் பேச மாட்டேங்கிறார். யுவராஜ் சிங் ஒன் டே மேட்சில் எல்லாம் கலக்கறார் - ஆனா டெஸ்ட் மேட்ச் வந்துட்டா சொதப்பறார். அவருக்கு ஒரே கோவம் தன்னை டீம்ல சேத்துகலையேன்னு.லக்ஸ்மன் பாவம்க - அவரும் சும்மா 50 ரன் சராசரி வச்சுருக்கர் - ஆனா ஒரு நாயும் மதிக்கரதில்லை. இந்த மாதிரி ஒரு டீமை வச்சுகிட்டு கும்ப்ளே ஜெயிச்ச மாதிரி தான்.