Friday, January 4, 2008

சச்சின் அடித்த செஞ்சுரி

கடைசியாய் சச்சின் தன்னுடைய முப்பத்தி எட்டாவது செஞ்சுரியை அடிச்சுட்டார். இந்த செஞ்சுரி கொஞ்சம் வித்தியாசமானது - சுயநலமின்றி கடைசி ஆட்களுடன் சேர்ந்து ஆடிய விதம் சூப்பர். அதிலும் பிரட் ஹோக் பௌலிங்கை அவர் கையாண்டது பார்க்க நன்றாக இருந்தது. நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியர்கள் சீக்கிரம் விக்கெட்டுகளை சாய்க்க வாழ்துவோமாக!

ரஜினி in ரோபோ

கடைசியா ஷங்கர் மறுபடியும் ரஜினி கிட்டயே சரண் அடைஞ்சுட்டாறு. ஷாருக், அர்ஜுன், அஜீத் எல்லாரும் போயி இப்போ ரஜினி தான் ஹீரோன்னு ஒரு புரளி ஓடிகிட்டு இருக்கு. மும்பையை சேர்ந்த அட்லாப்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஹ்மான் தான் இசை.

Monday, December 24, 2007

மோடியின் வெற்றி

குஜராத் மக்கள் தமிழர்களை போல மாங்காயாக இல்லாமல் மோடிக்கு வெற்றியை கொடுத்திருப்பதை பார்க்கும் பொது மகிழ்ச்சியாக இருக்கிறது. மோடிக்கு இருக்கும் image அவரை எம்.ஜி.ஆர் உடன் ஒப்பிட வைக்கிறது. லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியை மீண்டும் அவர் வழங்கிட வாழ்த்துக்கள்.
அவர் காங்கிரஸ் கட்சியை மட்டும் வெல்லவில்லை - மீடியாவின் அதிரடி புப்ளிசிட்டியையும் சேர்த்து வென்றிருக்கிறார். சட்டா பஜார் ஆகட்டும், புள்ளி விவரம் ஆனாலும் சேரி, மோடியை தொர்கடிதே தீருவது என்று மீடியா இறங்கி இருந்தது. ஆனாலும் அவரி ஒன்றும் பண்ண முடியவில்லை. இந்த தேர்தல் இந்தியாவுக்கே ஒரு பாடம். மாநிலத்தை முன்னேற்றினால் தான் ஒட்டு என்று குஜராத் மக்கள் தீர்ப்பளித்து விட்டார்கள். தமிழக மாங்காய்களே, நீங்க எப்போ இந்த மாதிரி விஜயகாந்துக்கு வாக்களிக்க போறீங்க?

Saturday, December 15, 2007

ஆற்காடு வீராஸ்வாமி vs ராமதாஸ்

இப்போது நடந்து கொண்டிருக்கும் புறம்போக்கு நிலத்துக்கான அறிக்கை சண்டை அனேகமாக தி.மு.க பா.ம.க உறவை முறித்து விடும். அதுவும் திருநெல்வேலி நகரத்தில் நடந்து கொண்டிருக்கும் தி.மு.கவின் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் தொண்டர்கள் தி.மு.க தலைவர்களை ஏற்றி விட்டு உறவை முறிக்க நிச்சயம் முயலுவார்கள். இன்றோ நாளையோ இந்த அறிவிப்பு வரலாம்.
அதே சமயம் கலைஞர் டி.வியில் ஸ்டாலின் மற்றும் ரமேஷ் பிரபா இடையே ஒரு பேட்டி ஒளிபரப்பினார்கள். என்னக்கேனமோ ஸ்டாலின் ஒன்றும் பெரிய அளவில் பேசினார் என்று சொல்ல முடியவில்லை.

Thursday, December 6, 2007

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு உறுதி

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் இடுபட்ட 3 பேருக்கு சென்னை உயர் நீதி மன்றம் தூக்கு தண்டனையை இன்று உறுதி செய்தது. இது போன்ற தீர்ப்புகள் தனிப்பட்ட மனிதர்களை மட்டுமன்றி அவர்கள் சார்த்திருந்த கட்சிகளையும் உட்கொள்ள வேண்டும்.

அரசியல் தலைவர்களின் தூண்டுதல் மற்றும் வெளிப்படையான ஆதரவின் காரணமாகவே இத்தகைய அரசியல் கொலைகள் நடைபெறுகின்றன. இது போன்ற தீர்ப்புகள் அந்த அரசியல் கட்சிகளை பாதிக்காத வரையில், அதனுடைய அரசியல் தலைவர்கள் திருந்த போவதில்லை.

இப்பொழுது தி.மு.க ஆட்சி நடப்பதால் இது போன்ற தீர்ப்பு வந்திருக்கின்றது. இன்னும் சொல்ல போனால் இந்த 3 பேருக்கும் தி.மு.க ஆட்சியின் போது தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றால் அதிமுக ஆட்சியின் போது, சிறையை விட்டு வெளியே வரவும் வாய்ப்பு இருக்கிறது. அத்தனை சாட்சிகளும் பல்டி அடிப்பார்கள் :-)

Saturday, December 1, 2007

ஞானியின் ஒ பக்கங்கள் - தமிழ் மொழியில் உயர் கல்வி?

ஞானி மேற்கல்வி தமிழில் இருக்க வேண்டும் என்று ஒ பக்கங்களில் எழுதி இருக்கிறார். இதெல்லாம் நடக்கிற காரியமா என்று தெரிய வில்லை. ஏனென்றால், பொறியியல் சம்பத்தப்பட்ட எல்லா புத்தகங்களும் ஆங்கிலத்தில் தான் எழுதப்படுகின்றன. இதை எல்லாம் தமிழில் மொழி பெயர்த்தால், அந்த காரியம் முடிவதற்கு இன்னும் 10 வருடங்களாவது ஆகும். அதுவும் இல்லாமல், ஜப்பானில் இருக்கும் பொறியியல் எழுத்தாளர்களை போல தமிழில் யாரும் இல்லை - அங்கு நடக்கும் ஆராய்ச்சியை போல, பிரான்சில் நடக்கும் ஆராய்ச்சியை போல நம்ம ஊரில் இல்லை. தமிழில் பொறியியல் படித்தவர்களை வேலைக்கு வைத்து கொள்ள யார் இருக்கிறார்கள்?
இன்று மென்பொருள் துறையில் நாம் சீனாவை ஓரம்கட்டி முன்னிலையில் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், நம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சம் ஆங்கில அறிவு தான்.

அதனால் இந்த மாதிரி முயற்சியை விட்டு விட்டு, ஒவ்வொரு இந்தியனையும் ஹிந்தியையும் ஆங்கிலத்தையும் கற்று கொள்ள ஊக்க படுத்த வேண்டும் - அது தான் இப்போது நாட்டுக்கு தேவை. இன்று ஹிந்தி தெரியாத தமிழனால் தமிழ் நாட்டிற்கு வெளியே செல்ல முடியவில்லை என்பதை ஞானி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மொழி கல்வி என்பது இரண்டடி பின்னே போகின்ற செயல் ஆகும்.

Thursday, November 29, 2007

உருப்பட வழியே இல்லை

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் அலுவல் மொழியாக தற்போது இருக்கும் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கொண்டு வரும் பரிந்துரைக்கு எதிராக தமிழக எம்.பி.,க்கள் பார்லிமென்ட்டில் குரல் கொடுத்துள்ளனர். ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரால் ஏற்கனவே தமிழக மக்களை இந்தியாவை விட்டு தள்ளி வைத்துள்ளனர். நம்முடைய மக்கள் பலருக்கு வேலை வாய்ப்பு இல்லைமைக்கு காரணம் ஹிந்தி மொழியை அறியாதது தான். கர்நாடகாவிலோ ஆந்திராவிலோ ஹிந்தியை எதிர்பதில்லையே? தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்ப்பு? இந்த விழயத்தில் நான் கேப்டன் கட்சி - அவர் ஒருவர் தான் மொழிகள் அறிய வேண்டிய விஷயத்தை பற்றி மக்களிடம் பேசியுள்ளார்.